நாமக்கல் தூசூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் அருகே துறையூர் சாலையில் தூசூர் ஏரி அமைந் துள்ளது. இந்த ஏரி 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டது. மாவட்ட அளவில் உள்ள பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்று. இந்த ஏரி மூலம் தூசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்று வரு கின்றன.
ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாக கொல்லிமலை உள்ளது. மழையின்மை காரணமாக தற்போது ஏரியின் பெரும்பகுதி வறண்டுகாட்சியளிக்கிறது. எனினும்,ஏரியின் ஒரு பகுதியில் தண்ணீர்தேங்கி காணப்படுகிறது. இது சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில் ஏரியில் நாமக்கல் நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில் ஒரு பகுதியில் மட்டுமே இருக்கும் நீரில் கழிவு நீர் கலப்பதால் நீர் கெடுவதுடன் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
எனவே, கழிவு நீர் கலப்பதை தடுத்து ஏரியை பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கிராம மக்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago