தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் - பேராலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு :

By செய்திப்பிரிவு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி என அனுசரித்து வருகின்றனர்.

நிகழாண்டு புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் திருஇருதய பேராலயத்தில் தஞ்சா வூர் மறைமாவட்ட ஆயர் எம்.தேவ தாஸ் அம்புரோஸ் தலைமையில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன. முன்னதாக, பேராலய வளாகத்தில் சிறப்பு நற்செய்தி, வாசகம், மறையுரை, மன்றாட்டு, திருச்சிலுவை ஆராதனை செய்யும் சடங்கு ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து, சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்பட்டு, மரித்த ஆண்டவரின் திருவுருவம் பவனியாக புனித வியாகுல மாதா ஆலயம் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிகழ்வில் பேராலய பங்குத் தந்தை இருதயராஜ், உதவி பங்குத் தந்தை அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலா யத்தில் மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையிலும், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் பேராலய அதிபரும், பங்குத்தந்தையுமான பாக்கியசாமி தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

அரியலூர் மாவட்டத்தில் அரிய லூர் புனித லூர்து அன்னை ஆலயம், புதுமார்க்கெட் வீதியி லுள்ள சிஎஸ்ஐ ஆலயம், ஏலாக் குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம் மற்றும் வரதராஜன் பேட்டை, செந்துறை, திருமானூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளி லுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று புனிதவெள்ளி சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடை பெற்றன. மாலையில் கிறிஸ்த வர்கள் சிலுவை ஏந்தி ஊர்வல மாகச் சென்றனர்.

பெரம்பலூர் புனித பனிமய மாதா தேவாலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று சிலுவைப் பாதை ஊர்வலம் நடை பெற்றது. மாலையில் திவ்ய நற் கருணை ஆராதனை, தேவா லயங்களில் சிலுவை முத்தமிடும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இதேபோல, பாளையம், நூத்தப் பூர், அன்னமங்கலம், பாடாலூர், எறையூர், தொண்டமாந்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை உட்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் நடைபெற்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்