சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் மாட்டுவண்டியில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில் நாதனும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் குணசேகரனும், அமமுக சார்பில் அன்பரசனும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஜோசப்பும், நாம் தமிழர் கட்சி சார்பில் மல்லிகாவும் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சியினர் பல்வேறு வியூகங்களை வகுத்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்கள் காய்கறி விற்பது, டீ, புரோட்டா தயாரிப்பது, நாற்று நடுவது என வித்தியாசமான பாணிகளில் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் மாட்டு வண்டியில் கிராமம், கிராம மாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறார்.
நேற்று பெரியகோட்டை அருகே ஏ.விளாக்குளம், கீழப்பிடாவூர், கீழமாவளி, பில்லத்தினி உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய் தார். விவசாயி போன்று மாட்டு வண்டியில் சென்ற வேட்பாளருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித் தனர்.
தொடர்ந்து பி.ஆர்.செந்தில் நாதன் பேசுகையில், ‘‘இப்பகுதி தொகுதியின் கடைக்கோடியாக உள்ளது. சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. நான் வெற்றி பெற்றதும் முதல் பணியாக இப்பகுதியில் சாலையைச் சீரமைத்துத் தருவேன். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் இப்பகுதி மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்’’ என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago