ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக வேட்பாளர்களை ஆத ரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 30-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதிக்கு இரவு 9.52-க்கு வந்த தினகரன், வேட்பாளர் முனிய சாமியை ஆதரித்து 8 நிமிடங்கள் பேசி சரியாக இரவு 10 மணிக்குப் பிரச்சாரத்தை முடித்தார். ஆனால் அன்றிரவு முதுகுளத்தூரில் வேட்பாளர் முருகனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இதனால், திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முதுகுளத்தூர் பேருந்துநிலையத்தில் இரவு 10 மணிக்குப் பின்னரும் காத்தி ருந்தனர்.
டி.டி.வி.தினகரன் இரவு 11.15 மணிக்கு முதுகுளத்தூர் செல்லும் வரையும் தொண்டர்கள் காத்திருந்தனர். அதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து டி.டி.வி.தினகரன் கையசைத்து வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணியைக் கடந்தும் அமமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கூடியிருந்து வாணவேடிக்கை வெடித்தும், வேட்பாளர் முருகனை ஆதரித்தும் டி.டி.வி.தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் முதுகுளத்தூர் தொகுதி பறக்கும்படை அலுவலர் ரவி போலீஸில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீஸார் டிடிவி.தினகரன், அமமுக வேட்பாளர் முருகன், தேமுதிக மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா, எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் ஜியாவுதீன், சாயல்குடி அருகே பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி, முதுகுளத்தூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago