ராணிப்பேட்டை மாவட்டத்தில் - வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று முன்தினம்ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் அரக்கோணம் (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 6-ம் தேதி இந்த 4 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ராணிப் பேட்டை பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன.

இதற்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேவை யான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று முன்தினம்நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப் பெட்டிகளை பாதுகாப்புடன் வைப் பதற்கான பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துக்கொள்ளும் இயந்திரங்களை வைப்பதற்கான கூடுதல் இடவசதிகளை அமைக் கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

4 தொகுதிகள் வாரியாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் வகையில் குறியீடுகளை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொகுதிவாரியாக தனித்தனி யாக வழித்தடம் அமைக்கவும், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் வாகனங்கள் எந்த வழியாக உள்ளே வருகிறதோ அதே வழியாக வாகனங்கள் வெளியேறிச்செல்ல வழித்தடம் அமைக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தேர்தல் பொது பார்வையாளர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எளிதாக வந்து செல்ல தனித்தனியே வழிகள் ஏற்படுத்த வேண்டும் எனக்கூறினார்.

அதேபோல, வாக்கு எண்ணும் போது பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வந்தவுடன் முழு பாதுகாப்பளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் துறையினருக்கு ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார், ராணிப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத் உட்பட பலர் உடனிருந்தனர்.

4 தொகுதிகள் வாரியாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் வகையில் குறியீடுகளை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்