வேலூர் அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் கிராமங்களில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் மாணவிகள் திவ்யா, வித்யா, செஞ்சு மௌனிகா, யுவ‌‌, முளின்டி, மௌனிகா, ஹரிபிரியா, சரஸ்வதி உள்ளிட்டோர் அடங்கிய குழு வினர் வேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளிடம் தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தை செயல்முறை படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, வெங்கடாபுரம் கிராமத்தில் அசோலா வளர்ப்பு குறித்தும் விளக்கியதுடன் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினர். மேலும், விவசாயிகளுக்கு அசோலாவையும் இலவசமாக வழங்கினர். அதேபோல், சிறுகாஞ்சி கிராமத்தில் மக்காச் சோளத்தில் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் எடுத்துரைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்