திருவண்ணாமலை ஒன்றியம் காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியப்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூர், கண்டியாங்குப்பம், வேளையாம் பாக்கம், நவம்பட்டு, அல்லி கொண்டாப்பட்டு, தச்சம்பட்டு, சின்னக்கல்லப்பாடி, பெரியக் கல்லப்பாடி கிராமங்களில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “பாஜக வேட்பாளர் எதை சொல்லி வாக்கு கேட்பார். கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார்களே, அதை சொல்லி வாக்கு கேட்பார்களா?. இல்லை பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு வாக்கு கேட்பார்களா?.
திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்றதும் ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஜுன் 3-ம் தேதி முதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கரோனா நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்” என்றார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், ஒன்றியச் செயலாளர் ரமணன், சந்திரன், மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago