தேர்தல் பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை :

தேர்தல் பணிகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் பணிகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்துவது என்பது அவர்களை அவமதிப்பதாகும். அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் கருதப்படும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், சுவரொட்டிகள் ஒட்டுதல், ஊர்வலம் செல்லுதல், முழக்கங்கள் எழுப்புதல், கூட்டங்களுக்கு அழைத்து வருதல் போன்ற தேர்தல் பணிகளுக்குக் குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைக் கட்சியினர் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், திண்டுக்கல் ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்