திருச்சி - மயிலாடுதுறை, காரைக்கால் பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே முதன்மை இயக்கக மேலாளர் தகவல்

தஞ்சாவூரைச் சேர்ந்த பொது நல வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார், மத்திய ரயில்வே அமைச்சர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாள ருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தார்.

அந்த மனுவில், “கரோனா ஊரடங்கின்போது, திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள 22 பயணிகள் ரயில் சேவை முற்றிலு மாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊர டங்கு படிப்படியாக விலக்கி கொள் ளப்பட்டும், இதுவரை பயணி கள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால், நாள் தோறும் பல்வேறு இடங்களுக்கு பணிக்கு செல்லும் அலுவலர்கள் மற்றும் மாணவர் கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால், முடக்கப் பட்டுள்ள பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு தெற்கு ரயில்வே முதன்மை இயக்கக மேலாளர், ஜீவக்குமாருக்கு கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில், திருச்சி-மயிலாடுதுறை, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில் அடுத்த கட்டமாக விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்