சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகளை திருவாரூர் மற்றும் நன்னிலம் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ராம்லஹான் பிரஷாத் குப்தா நேற்று ஆய்வு செய்தார்.
நடைபெறவுள்ள சட்டப்பேர வைத் தேர்தலில் செலவினம் மற்றும் நன்னடத்தை விதிமீறல் களை தவிர்த்திடும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 12 பறக்கும் படைக்குழுக்கள் (தலா 3), 12 நிலை கண்காணிப்புக் குழுக்கள் (தலா 3), 4 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் (தலா 1), 4 செலவின குழுக்கள் (தலா 1), 4 வீடியோ பார்வைக் குழுக்கள் (தலா 1), 4 உதவி தேர்தல் செல வின பார்வையாளர்கள் (தலா 1) நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகு திகளுக்கான பொது பார்வை யாளர் ராம்லஹான் பிரஷாத் குப்தா, நன்னிலம் தொகுதிக் குட்பட்ட வண்டாம்பாளை பகு தியில் நேற்று தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க நியமிக் கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை குழுக்களின் செயல்பாடு களை ஆய்வு செய்தார்.
பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், கண்காணிப்பு குறித்த பதிவுகளையும் பார்வை யிட்டார். தொடர்ந்து, நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்புவதற்கு தயார் செய்யும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago