திருவாரூர் மாவட்டம், மன்னார் குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜாவை ஆதரித்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது:
தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் பழனிசாமி அவரது தேர்தல் வேட்பு மனுவில் தனக்கு விவசாய நிலங்கள் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மக்களின் தேவைகள் என்ன என்பதை மக்களிடம் நேரடியாக சென்று கேட்டு ஆய்வு செய்து அதன் பின்னர் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதிமுகவோ திமுகவின் தேர்தல் அறிக்கையை நகலெடுத்து தனது அறிக்கையாக வெளியிட் டுள்ளது என்றார். கூட்டத்தில் மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி.ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நீடாமங்கலத்தி லும் அவர் பிரச்சாம் செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago