வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தும் - மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங் களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1,371 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள பொருட் கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் மாவட் டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங் களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இறுதிக்கட்ட பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவன் அருள் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி களிலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி களும் நிறைவுப்பெற்றுள்ளன.

திருப்பத்தூர் தொகுதியில் 335 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 436 விவிபாட் இயந்திரங்கள், 402 பேலட் யூனிட்கள், 280 கன்ட்ரோல் யூனிட்கள் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல, ஜோலார்பேட்டை தொகுதியில் 340 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்த 442 விவிபாட் இயந்திரங்கள், 408 பேலட் யூனிட் கள், 340 கன்ட்ரோல் யூனிட்கள் தயார் நிலையில் உள்ளன

ஆம்பூர் தொகுதியில் 335 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 436 விவிபாட் இயந்திரங்கள், 402 பேலட் யூனிட்கள், 280 கன்ட்ரோல் யூனிட்கள் தயார் நிலையில் உள்ளன.

வாணியம்பாடியில் தொகுதியில் 361 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்த 470 விவிபாட் இயந் திரங்கள், 434 பேலட் யூனிட்கள், 235 கன்ட்ரோல் யூனிட்களில் சின்னங்கள், பெயர்கள் பொருத்தப் பட்டு சரிபார்க்கப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள அனைத்துப் பொருட்களும், கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவுக்கு முன் பாக இவை அனைத்தும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வந்தனாகர்க் (திருப்பத்தூர்), காயத்ரி சுப்பிரமணி (வாணியம்பாடி), லட்சுமி (ஜோலார்பேட்டை), கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவப்பிரகாசம், சுமதி, ஆனந்த கிருஷ்ணன், மோகன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல் (திருப்பத்தூர்), சச்சி தானந்தம் (ஆம்பூர்) உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்