குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் - கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் : எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வாக்குறுதி

By செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார்.

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுகவேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட புத்துமாரியம்மன் கோயிலில் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து எஸ்.கே.எஸ் நகர், அம்பேத்கர் நகர், எம்ஆர்கே நகர், ஈஸ்வரன் கோயில் தெரு, வள்ளலார் நகர் ,ஆடுர்குப்பம், விருப்பாச்சி, புதுக்குப்பம், பெருமாள்கோயில் தெரு, கடைவீதி, பேருந்து நிலையம், அண்ணா நகர் உட்பட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசியது:

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்க கூட்டு குடிநீர் திட்டம்செயல்படுத்தப்படும். குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்செயல்படுத்தப்படும். நெசவாளர்களின் நலன் பாதுகாக்கப்படும், அரசு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்படும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துவாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்