நாமக்கல் நரசிம்மர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல்லில் நரசிம்மர், நாமகிரித் தாயார் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் நரசிம்மா், நாமகிரித் தாயாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத தோ்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்தாண்டுக் கான தேர்த்திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருத்தேர் உலா நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தேரோட்டத்தில் பெரிய தேரில் நரசிம்மா், நாமகிரித் தாயார் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாலையில் சிறிய தேரில் ஆஞ்சநேயா் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்