தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெறப் போகும் வெற்றி இந்தியாவுக்கே பாடம் புகட்டுவதாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணனை ஆதரித்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் அவர் பேசியது:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென லட்சக்கணக்கான விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். பலர் உயிர்த் தியாகமும் செய்துள் ளனர். இதற்குப் பிறகும் அந்த விவசாயிகளுடன் பேசுவதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் விவசாயத்தில் முன்னேற்றம் வேண்டுமெனில் திமுக ஆட்சி அமைய வேண்டும். நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், ரயில்வே, விமானம், ஓஎன்ஜிசி மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் என அனைத்தையுமே தனியாருக்கு தாரைவார்க்க மோடி அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இவற்றை நாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், பாஜக- அதிமுக கூட்டணிக்கு முடிவுகட்ட வேண்டும்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அரசி யல் சட்டங்களை அழித்து வருகின் றனர். அவர்களுக்கு பின்பாட்டு பாடுபவர்களாக இபிஎஸ்- ஓபிஎஸ் இருக்கின்றனர். பிரதமர் மோடிக்கு பக்கத்தாளம் வாசிக்கிற அதிமுக அரசு தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக கூட்டணியின் வெற்றி என்பது, இந்தியாவுக்கே பாடம் புகட்டும் வகையில் அமையும். அதற்கு, திருவாரூரில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலைவாணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து, கந்தர்வக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியது:
குடியுரிமைச் சட்டம், வேளாண் சட்டம் உட்பட பாஜக கொண்டு வந்த மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் அதிமுக ஆதரித் துள்ளது. எனவே, தமிழகத் துக்கு மட்டுமில்லாமல் இந்தியா வுக்கே அதிமுக துரோகம் செய்துள்ளது. கரோனா காலத்தில் மக்களுக்கு நிவாரணம் தரவும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவும் நிதியில்லை எனக் கூறிய மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்கு ரூ.8 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்துள்ளது என்றார்.
இக்கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித் தார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, திமுக வடக்கு மாவட்ட பொறுப் பாளர் கே.கே.செல்லபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன் னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் உள்ளிட்டோர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago