அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் - ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் : உருவபொம்மை, படங்கள் எரிப்பு; போலீஸாருடன் தள்ளுமுள்ளு

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவை கண்டித்து, தமிழகத்தின் பல இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் ஆ.ராசாவின் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறை யினர், எரிந்துகொண்டிருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதை அதிமுக வினர் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள் ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அரியலூர் அண்ணா சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்தனர்.

திருச்சி திருவெறும்பூர் கடை வீதியில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பகுதிச் செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராவணன், துவாக்குடி நகரச் செயலாளர் பாண்டியன், பொன்மலை பகுதிச் செயலாளர் பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயில் அருகே அதிமுக பகுதிச் செயலாளர் பூபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட் டத்தில், ஆ.ராசாவின் உருவப் படங்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் கடைவீதியில் முன்னாள் கவுன் சிலர் மதியழகன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆ.ராசாவின் உருவ பொம்மையை அதிமுகவினர் தீயிட்டு எரிக்க முயன்றனர். அதை தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் தடுத்து, உருவபொம்மையை பறித்து, அப்புறப்படுத்தினர்.

நாகை மாவட்டம் திருமருகல் எம்ஜிஆர் சிலை அருகே அதி முக சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பக்கிரி சாமி தலைமை வகித்தார். அப்போது, ஆ.ராசாவின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். இதை போலீஸார் தடுக்க முயன் றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்