வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 54 பேர் போட்டியிடவுள்ளனர். தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் களின் பெயர்கள், சின்னங்கள் ஆகிய வற்றை பொருத்தும் பணிகள் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றும் வரும் பணிகளைமாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெல் நிறுவன பணியாளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சிவன் அருள், அவர்களிடம் தேர்தலில் எந்த குழப்பமும் இல்லாத வகையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என அறி வுறுத்தினார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வாணி யம்பாடியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மே 2-ம் தேதிஎண்ணப்படுகின்றன. வாக்குப் பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டி கள் பாதுகாப்புடன் வைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆட்சியர் சிவன் அருள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறை, மின்னனு வாக்குப்பதிவு இயந் திரங்கள் வரிசைப்படி வைக்க தயார் செய்யப்பட்டுள்ள பணிகள், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். விரைவில், அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என தேர்தல் பணி யாளர்களுக்கு ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காயத்ரி சுப்பிரமணி (வாணியம்பாடி), லட்சுமி (ஜோலார்பேட்டை), கிருஷ்ணமூர்த்தி (ஆம்பூர்), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மோகன், அனந்தகிருஷ்ணன், சுமதி மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்