திருப்பூர் மாவட்டத்தில் முதியவர்,மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளில் இன்றும் (மார்ச் 29), நாளையும் (மார்ச் 30) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, "கரோனா தொற்று காரணமாக 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் விருப்பத்தின்பேரில், வீடுகளில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்களுக்கு படிவம் 12-டி வழங்கி, அவர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெற சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக தனிக்குழுக்கள் அமைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பூர்மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 441 மாற்றுதிறனாளிவாக்காளர்கள், 80 வயதுக்கு மேற்பட்ட 3430 மூத்த வாக்காளர்கள் என3871 பேர், அவர்களது இருப்பிடத்திலேயே இருந்து வாக்கு செலுத்த உள்ளனர். இதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி வாக்குச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் 155 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் வாக்காளரின் இருப்பிடத்துக்கு சென்று, வாக்குச்சீட்டுகளை வழங்கி அவர்கள் வாக்களித்த பிறகு, அவர்களிடம் இருந்து வாக்குச்சீட்டுகளை திரும்பப்பெற உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வாக்குச்சாவடி அலுவலர், மண்டல அலுவலர், நுண் பார்வையாளர், காவலர் மற்றும் வீடியோகிராபர் இடம்பெறுவர்" என்றனர்.
குடிமைப்பொருள் வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago