கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வாக்காளர்களின் கைகளைப் பிடித்து குலுக்க வேண்டாம் என வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சி வேட்பாளர்கள் உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தேர்தல் பொது பார்வையாளர் நவ்தீப் ரின்வா, செலவின பார்வையாளர் அரூப் சட்டர்ஜி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன், தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், உதவி தேர்தல் வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் 14 வேட்பாளர்கள் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கிப் பேசியதாவது:
வேட்பாளர்கள் வாக்குக் கேட்கச் செல்லும்போது, அவர் களுடன் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அவர்கள் நால்வரும் கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிய வேண்டும். வாக்குச் சேகரிக்கும்போது பொதுமக்களிடம் கைகுலுக்க கூடாது.
வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணும் மையங் களிலும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago