வாக்காளர்களை கவர்ந்து இழுக்கும் நோக்கில் சட்ட விரோத பரிசுப் பொருட்களின் விநியோ கத்தை தடுக்க மத்திய சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி)பறக்கும் படை அமைக்கப்பட்டுள் ளது.
இதுதொடர்பாக ஈரோடு மண்டல உதவி ஆணையர் அஜய் பீட்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிமுறை களுக்கும், சட்டத் திற்கும் புறம்பாக இலவச பரிசுப் பொருட்களின் பரி மாற்றத்தைத் தடுக்கும் வகையில் ஜிஎஸ்டி பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது மண்டல உதவி ஆணையர் தலைமையில் குழுக்கள் அமைக் கப்பட்டு, ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம்,கோபி, சத்தியமங்கலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது.
ஜிஎஸ்டி பறக்கும் படை குழுவினர் வாகனத் தணிக்கையிலும், கிடங் குகள், தொழிற்சாலைகளை கண் காணித்தல், சோதனை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளைச் செய்து வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு வழங்கு வதற்காக புடவை, சமையலறை பொருட்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் போன்ற வற்றை அங்கீ கரிக்கப்படாத முறையில் சேமிப்பதைத் தடுக்க சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணை யத்தின்விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக மற்றும் கணக்கில் வராத பொருட்கள் மற்றும் பணம் போன்றவற்றை பதுக்கிவைப்போர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான புகார்களை 0424-2291081, 9500912108 மற்றும் 9976540010 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம், எனத் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago