‘திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 110 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை’ :

By செய்திப்பிரிவு

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், தேர்தல் பொது பார்வையாளர் மஷீர் ஆலம் ஆகியோர் தலைமையில், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 110 வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது. மேலும், ரேண்டம் முறையில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து திரையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பொது பார்வையாளரிடம் தற்போது வழங்கலாம் எனதெரிவிக்கப்பட்டதையடுத்து, கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக பொது பார்வையாளரிடம் வழங்கினர்.

திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பேசும்போது, "தபால் வாக்குகளை பதிவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பலர் போதிய பயிற்சி இல்லாமல் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் தபால் வாக்குகள் அறை முழுமையாக ’ஸ்ட்ராங் ரூம்’ஆக தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினரை அழைத்து, தபால் வாக்குகளை காண்பிக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்