திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
இதை தேர்தல் பார்வையாளர் (பொது) ராம் லஹான் பிரஷாத் குப்தா, மாவட்ட தேர்தல் அலுவலர் வே.சாந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் வே.சாந்தா கூறியது:
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,657 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வேலுடையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 1,971 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மஞ்சக்குடி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியிலும், மன்னார்குடி தொகுதியின் 2,206 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருத்துறைப்பூண்டி தொகுதியின் 1,148 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தூய அந்தோனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சிஅளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago