திருப்பத்தூர் மாவட்டத்தில் - பதற்றமான வாக்குச்சாவடிகளில்மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு : ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான 154 வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட உள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தேர்தலில் 499 பள்ளி வளாகங்களில் 1,371 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில், 80 மையங்களில் உள்ள 154 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் சார்பில் இறுதி செய்யப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகளில் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் நில்காந்த் ஆவாத், தேர்தல் செலவின பார்வையாளர் விஜய் பஹதூர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில், ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘பதற்றமான வாக்குச்சாவடிகள் ஒவ்வொன் றிலும் மத்திய அரசுப்படை வீரர் ஒருவர், ஒரு காவலர் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். இங்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் கட்சியினர், பொதுமக்கள், வாக்காளர்கள் என யாரும் பதற்றம் அடைய தேவையில்லை. அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கலாம். தங்கள் பகுதியில் எந்த வாக்குச் சாவடி மையங்களிலாவது பிரச்சினைகள் இருக்கிறது என்பது குறித்த தகவலை தெரிவித்தால், அங்கு பாது காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்