நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பரமத்தியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் அள்ளினார்களோ இல்லையோ தமிழக அரசு கஜானாவை முதல்வர் பழனிசாமி அரசு தூர் அள்ளிவிட்டது. கரோனா லாக் டவுன் காலத்தில் மக்கள் பலர் சிரமத்திற்குள்ளாகினர். அந்தக் காலத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஆனால், அந்த காலக் கட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் என துணை முதல்வர் தெரிவிக்கிறார். உலக
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியவில்லை என திமுக தவியாய் தவித்து வருகிறது. இந்தப்பக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கஜானாவை காலி செய்து சானிடைசர் அடித்து மூடி வைத்துள்ளது. ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து கஜானாவை பார்த்து காலியாக இருந்தால் பொதுமக்கள் சொத்து, உடமைகள் சூறையாடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்துக்கு வராத வேட்பாளர்
பரமத்தியில் நடந்த பிரச்சார கூட்டத்துக்கு திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஹேமலதா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு அமமுக வேட்பாளர்களை ஆதரித்து நசியனூரில் டிடிவி தினகரன் பேசியதாவது:அதிமுக அறிவித்துள்ள இலவச திட்டங்களை செயல்படுத்த மாதம் ரூ.5000 கோடி தேவை. ஏற்கெனவே 5 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருக்கும் நிலையில், இவற்றையெல்லாம் செயல்படுத்த முடியாது.
அமமுக தேர்தல் அறிக்கையில் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் குறித்துதான் வாக்குறுதிகளை அளித்துள்ளோம். இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றும் காலம் போதும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுத்தால்தான் தமிழகம் முன்னேற்றம் அடையும். தேர்தலின்போது, ஆளுங்கட்சியிடம் இருந்து பணமூட்டை உங்களைத் தேடி வரும். அதைப் பெற்றுக்கொண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல், அவர்களுக்கு பதிலடி கொடுங்கள். தமிழகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago