கரோனா தடுப்பூசியை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் - உலகின் மருந்தகமாக திகழ்கிறது இந்தியா : பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பெருமிதம்

By செய்திப்பிரிவு

உலகின் பல நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் உலகத்தின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது என பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூ ரில், திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி எஸ்.வெங்கடேசனை ஆதரித்து நேற்று மாலை நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

காங்கிரஸ்- திமுக கூட்டணி தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத கூட்டணி. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியில் தான் தடை விதிக்கப்பட்டது. மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை நீக்கியதன் மூலம், அந்த விளையாட்டு பாது காக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல, திமுக- காங்கி ரஸ் ஆட்சியில் 700-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். ஆனால், மோடி பிரத மரான பிறகு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானை சிலர் அவமதித்தபோது, அதற்கு திமுக கண்டனம்கூட தெரிவிக்க வில்லை. ஆனால், முருகப் பெருமானை அவமதித்தவர்கள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது.

காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.17,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய் யப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு ரூ.9.10 லட்சம் கோடியை மோடி அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு ரூ.2.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் 12 பொலிவுறு நகரங்கள், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, பாதுகாப்பு தளவாட தொழிற் சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என தமிழகத்துக்கு மத்திய அரசு பல்வேறு ஒப்புதல்களை அளித் துள்ளன.

அதிமுக- பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்தால், உள்ளூர் கைவினைப் பொருட்களான தஞ் சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் கலைத்தட்டு உள்ளிட்டவற்றுக்கு தேசிய, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.

தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியாக உள்ள அதிமுக, தேசிய பண்புகளுடன் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. அந்த வகையில், அதிமுகவும் பாஜகவும் தேசிய கட்சிகளாக ஒருங்கிணைக் கப்பட்டிருக்கின்றன. இந்த இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதால், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழகத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி கணிச மான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள 72 நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் உலகத்தின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது.

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி வைத்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட, அதிமுக- பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்