திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிடும் - 54 வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் : ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட உள்ள 54 வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை 3 முறை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம் பாடி, ஜோலார்பேட்டை மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் தேர்தல் கணக்கு செலவு களை உரிய ஆவணங்களுடன் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கு முன்பாக 3 முறை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 25-ம் தேதி, மார்ச் 30-ம் தேதி, ஏப்ரல் 3-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும்.

ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் தொடர்பான செலவு கணக்குகளை மார்ச் 26-ம் தேதி, மார்ச் 31-ம் தேதி ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

ஜோலார்பேட்டை தொகுதிக்கான வேட்பாளர்கள் மார்ச் 25-ம் தேதி, மார்ச் 30-ம் தேதி ஏப்ரல் 4-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும்.

திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவீன கணக்குகளை மார்ச் 25-ம் தேதி, மார்ச் 30-ம் தேதி ஏப்ரல் 4-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.45 மணிக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்