திருப்பூர் மாவட்டத்தில் - 549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை : தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் 549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 122 வாக்குப்பதிவு மையங்களில் 549 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. தாராபுரம் (தனி) 30, காங்கயம் 48, அவிநாசி(தனி) 33, திருப்பூர் வடக்கு 119, திருப்பூர் தெற்கு 110, பல்லடம் 81, உடுமலைப்பேட்டை 79 மற்றும் மடத்துக்குளம் 49 என மாவட்டம் முழுவதும் 549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 119, குறைந்தபட்சமாக தாராபுரத்தில் 30 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தாராபுரம், காங்கயம் மற்றும் மடத்துக்குளத்தில் தலா 1 வாக்குச்சாவடிகள் என மூன்று வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 552 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். அதேபோல வாக்குப்பதிவு தொடங்கி, வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் வரை, வெப் கேமரா மூலம் இணையத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்