ராமநாதபுரம் அருகே இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் கைது :

ராமநாதபுரம் அருகே இரு தரப்பினர் மோதலில் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டது தொடர்பாக இளமனூர் ஊராட்சித் தலைவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகேயுள்ள இளமனூர் ஊராட்சித் தலைவராக இருப்பவர் பூவானந்தம். ஊராட்சித் துணைத் தலைவராக இருந்த காளீஸ்வரன் சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென காளீஸ்வரன், தீபக்குமார் உள்ளிட்டோர் பூவானந்தம் வீட்டு பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் காளீஸ்வரன் தரப்பினர் சென்ற இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது.

இருதரப்பு மோதலில் காயமடைந்த பூவானந்தம், தீபக்குமார் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதுகுறித்து கேணிக்கரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதன்படி இருசக்கர வாகனம் எரித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஊராட்சித் தலைவர் பூவானந்தம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல பூவானந்தம் அளித்த புகாரின் பேரில் காளீஸ்ரன், தீபக்குமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE