வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லை யென்றாலும், குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும்சுகாதாரத் துறையினர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளி பேணுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறை களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கரோனா தாக்கம் அதிகம் உள்ள கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று வரவும், தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்துகோவை, சேலம் செல்லும் தொழிலாளர்களுக்கும், அங்கிருந்துஇங்கு வரும் தொழிலாளர் களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுகு 2000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை அந்தந்த பகுதி சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு கரோனா இல்லை என்றாலும், அவர்கள் தங்களை வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
திருவிழா, துக்க நிகழ்ச்சி, திருமணம் போன்றவற்றில் பங்கேற்போர் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago