வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் அதிமுக எம்எல்ஏ பேச்சு : நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் திமுக மனு

By செய்திப்பிரிவு

வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய நாமக்கல் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ள விவரம்:

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ கேபி.பி.பாஸ்கர் கடந்த 20-ம் தேதி மாலை மோகனூர் - நாமக்கல் சாலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில், வாக்காளர்களை பார்த்து அதிமுகவின் இரட்டை இலைக்கு மனசாட்சிப்படி வாக்களிக்காவிடில் வாக்காளர்கள் சத்தியமாக நல்ல சாவு அடையமாட்டார்கள் என வாக்காளர்களை அவதூறாகவும், அச்சுறுத்தி, மிரட்டியும்பேசியுள்ளார். இது வாக்காளர்களை கேவலப் படுத்தும் வகையிலும் பொது அமைதியை குலைக்கும் என்பதை தெரிந்தே பேசியுள்ளார். எனவே எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் தொகுதி பொறுப் பாளர்களான திராவிட மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வ. க. அறிவழகன், நீதிமன்ற வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்ராஜ், சேந்தமங்கலம் தொகுதி ஒருங்கிணைப் பாளர் இளையரசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்