பல சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு செய்து தரப்படும் : குமாரபாளையத்தில் அன்புமணி பேச்சு

By செய்திப்பிரிவு

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பல சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு செய்து தரப்படும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பி.தங்கமணியை ஆதரித்துபாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் வியாபாரி. பழனிச்சாமி தலைமையிலான அதிமுகதான் ஆட்சி அமைக்க வேண்டும் எனதமிழகம் முழுவதும் விவசாயிகள்முடிவெடுத்து விட்டனர். பெண்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. திமுக ஆட்சியில் அப்படியில்லை. வீட்டை விட்டே வெளியில் வர முடியாது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 உங்கள் வங்கி கணக்கில் வந்து விடும். ஆறு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பாமகவிற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தந்துள்ளனர். இதுபோல்இன்னும் உள்ள பல சமுதாயத்தினருக்கும் இட ஒதுக்கீடு செய்து தரப்படும். பெண்களுக்கு வாஷிங்மெஷின் தருவதாக அறிவித்துள்ளனர். இது ஒரு பெண் விடுதலை என்பேன். நில அபகரிப்பு என்பது அதிமுக ஆட்சியில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நில அபகரிப்பு இருக்கும், என்றார். அதிமுக, பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்