வேலூர் மாவட்டத்தில் இன்று - மூத்த குடிமக்கள் தபால் வாக்களிக்க நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இன்று தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத காரணத்தால், அவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 24,485 பேரும், மாற்றுத்திறனாளிகள் 7,124 பேரும் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள், தபால் வாக்களிக்க விண்ணப்ப படிவங்கள் ஏற்கெனவே வீடு, வீடாக வழங்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 531 மாற்றுத் திறனாளிகள், 2,629 மூத்த குடிமக்கள் என மொத்தம் 3,160 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். அதன் படி, இன்று (25-ம் தேதி) 3,160 பேர் தபால் மூலம் வாக்களிக்க மாவட்ட தேர்தல் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 15 குழுக்கள் இதற்காக தயார் செய்யப்பட்டுள்ளன. இக்குழுவினர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித் துள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு இன்று நேரில் சென்று தபால் வாக்கு அளிப்பதற்கான விண் ணப்பத்தை அவர்களிடம் வழங் குவார்கள்.

அதை பெற்று மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளி களும் தங்களது தபால் வாக்கை பதிவு செய்து குழுவினர் கொண்டு வந்த பெட்டியில் தபால் வாக்கை போட வேண்டும். தபால் வாக்குகள் பெறப்பட்ட பெட்டிகளை அந்தந்த சட்டப்பேரவையின் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் குழுவினர் ஒப்படைப்பார்கள்.

இன்று நடைபெறும் தபால் வாக்குப்பதிவில் வாக்களிக்க முடியாதவர்கள் நாளை மறுநாள் (27-ம்தேதி) வாக்களிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை பெறும் குழுவினர் வீடு, வீடாக சென்று தபால் வாக்குகளை பெறுவார்கள்.

தபால் வாக்கு போட விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் எக்காரணத்தை கொண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து நேரில் வாக்களிக்க முடியாது. அதேபோல, கடந்த 16-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை கரோனா பாதித்தவர்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்த வர்களின் பெயர் பட்டியல் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களும், தபால் மூலம் வாக்களிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்