திருப்பத்தூர் மாவட்ட கருவூல அலுவலகம் திறப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் தனியார் கட்டிடத்தில் மாவட்ட கருவூல அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி ஆட்சியர் சிவன் அருள் நேற்று திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, திருப்பத்தூர் மாவட்டத்துக்காக அரசுத் துறைகள் ஒவ்வொன்றாக உருவாக்கப்பட்டு ஒரு சில துறைகளுக்கு புதிய கட்டிடங்களும், ஒரு சில துறை களுக்கு தனியார் வாடகைக் கட்டிடத்தில் இயங்குமாறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கான மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை பிரிவு வேலூர் மாவட்டத்தில் இருந்தபடி செயல்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை தனியாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட் டத்தில் இணைக்கப்பட்டது.

புதிய மாவட்ட கருவூல அலுவலகம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் இருந்தபடி இயங்கி வந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலை, ஆசிரியர் நகர், தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே மூக்கனூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக மாத வாடகை அடிப்படையில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தனியார் கட்டிடத்தில் திருப்பத்தூர் மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் குத்துவிளக்கேற்றி நேற்று திறந்து வைத்தார். மாவட்ட கருவூலம் துறையின் கட்டுப்பாட்டில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் சார் கருவூலகங்கள் இயங்கும்.

தற்போது, வாடகைக் கட்டிடத்தில் செயல்பட உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டு மானப்பணிகள் முடிவுற்றப்பிறகு நிரந்தரமாக அங்கு இடமாற்றம் செய்யப்படும் என அரசு அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், மண்டல இணை இயக்குநர் (கருவூலத்துறை) சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மாவட்ட கருவூல அலுவலர் (பொறுப்பு) கோபிநாத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மோகனகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முருகானந்தன், உதவி கருவூல அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்