தி.மலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற - அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலோசனை நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொது தேர்தல் பார்வையாளர்கள் அருண் கிஷோர் டோங்க்ரே, விஜய்குமார் மன்டிரி, பிரபாகர், கம்லேஷ்வர் பிரசாத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,885 வாக்குச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், ஆரணி தச்சூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத் திலும் வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை அனைத்து கட்சியினரும் முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்த பிறகு வரும் பணப்பரிவர்த்தனை சீட்டில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்