கடலூர் உழவர் சந்தை முன்பு நேற்று காலை அரசு ஜீப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஜீப்யை யாரோ கடத்தி எடுத்துச் சென் றுள்ளனர். இது குறித்து புகார் வர, தனிப்பிரிவு போலீஸார், அடுத்தடுத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர்.
புதுச்சத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சிவஞானமுத்து இந்த ஜீப் அவரது காவல் நிலையத்தை தாண்டி சிதம்பரம் நோக்கிச்செல்வதை பார்த்துள்ளார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில், அந்த ஜீப்பை விரட்டிச் சென்று பி.முட்லூர் அருகில் அந்த வாகனத்தை மடக்கி அதனை ஒட்டிச் சென்ற த.பாளையம், கருப்பஞ்சாவடி செல்வராஜ் மகன் மணிவேல் (31) என்பவரைக் கைது செய்து ஜீப்பையும், மணி வேலையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். கைதான மணிவேல், தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது. ‘ஒருவித ஜாலிக்காக திருடினேன்’ என்று போலீஸார் நடத்தியவிசாரணையில் கூறியுள்ளார். திருப்பாதிரிபுலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடந்து வருகின்றனர்.
தலைமைக் காவலர் சிவஞானமுத்துவின் பணியைப் பாராட்டி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அபிநவ் அவருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago