ஊத்தங்கரை பகுதியில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பால், கிலோ ரூ.1-க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விலை சரிவால் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4735 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விளையும் முள்ளங்கி, பெங்களூரு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதியில் விளையும் முள்ளங்கி, உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். நிகழாண்டில்ஊத்தங்கரை பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரித் துள்ளதால், விலை வெகுவாக சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக ஊத்தங்கரை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறும்போது, ‘‘கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முள்ளங்கி கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது. இதனால் இப்பகுதியில் விவசாயிகள் பலர் முள்ளங்கி பயிரிட்டனர். தற்போதுமுள்ளங்கி விளைச்சல் அதிகரித் துள்ளது.
சந்தைகளுக்கு முள்ளங்கி வரத்து அதிகமாக உள்ளதால், கிலோ ரூ.1-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் எங்களுக்கு அறுவடை கூலிகூட கிடைப்பதில்லை. நிலத்தில்பறிக்காமல் விட்டால், வீணாகிவிடும் என்பதால், கிடைக்கும் விலைக்கு சந்தையில் விற்பனைசெய்துவிட்டு செல்கிறோம். தற்போது பெரிய அளவில் இழப்பினை சந்தித்துள்ளோம,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago