தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும், டெல்லியில் இருந்து ஆளக்கூடாது, என திருச்செங் கோட்டில் நடந்த பிரச்சாரத்தில் திமுக எம்பி கனிமொழி பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணிச் செயலாளர் எம்.பி.கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருச்செங் கோட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து எம்பி கனிமொழி பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். ரிக் வாகனம் வைத்துள்ளவர்கள் இந்தப் பகுதி மக்கள் தான். பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் தொடர்ந்து விலையேற்றம் அடைந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலை குறைக்கப்படும். பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்த வைத்துவிட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துப் பொருட் களும் விலையேற்றம் அடைந்து வருகின்றன. ரேஷனில் தரமில்லாத மற்றும் அளவு குறைந்த அரிசி, சர்க்கரை வழங்கப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கடை உண்மையாகவே ரேஷன்கடையாக செயல்படும்.
இந்த ஆட்சியில் முதி யோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.1000 உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதுபோல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகர்ப்புற பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணம் இல்லை. திருச்செங் கோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப் படும். திருச்செங்கோட்டில் பாலி டெக்னிக், தொழிற்பேட்டை அமைக் கப்படும். அர்த்த நாரீஸ்வரர் கோயி லுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விவசாய சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்கள் விலை கடுமையாக ஏற்றமடையும். இந்த சட்டத்தை இன்று வரை விவசாயிகள் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தவர்கள் தான் அதிமுகவினர். இதுபோல் குடியுரிமைசட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். தற்போது இவ்விரு சட்டங் களையும் நீக்க நடவடிக்கை எடுப்பதாக அதிமுகவினர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அடையாளம், பெருமை, மொழி, சுயமரியாதை உள்ளிட்ட அனைத் தையும் டெல்லியில் மோடி, அமித்ஷாவிடம் அடகு வைத்துள்ளனர். தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இது. சமூக நீதி மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் இது. தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும். டெல்லியில் இருந்து ஆளக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து குமார பாளையத்தில் திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து எம்பி கனிமொழி பேசினார். நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி உள்பட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago