வாக்குச்சாவடி அலுவலர்கள் நடு நிலையாக பணியாற்ற வேண்டும் என கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 248 மண்டல அலுவ லர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவாக்குச்சாவடி தலைமை அலு வலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
இதில், கடலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலர்களுக்கு செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் நடுநிலையாக பணியாற்ற வேண்டும்.
பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக பணி யாற்றிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், கடலூர் வட்டாட்சியர் பலராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago