வேட்பாளர்களின் வாகன அனுமதியை தவறாக பயன்படுத்தினால் வாகனம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சந்திரமோகன் பிரசாத் காஸியாப், ராம் லஹான் பிரஷாத் குப்தா, செலவின பார்வையாளர்கள் அருண்குமார், மயங்க் குமார், காவல் பார்வை யாளர்கள் அமித்சந்த்ரா ஆகியோர் தலைமையிலும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா முன்னிலையிலும் அனைத்து அரசியல் கட்சிப் பிரநிதி நிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் தொகுதி களைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் விவாதிக் கப்பட்ட அம்சங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் வே.சாந்தா தெரிவித்துள்ளது:

நகர்ப் புறங்களில் உள்ள பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் பிளக்ஸ், பதாகைகள், சுவரொட்டி, சுவர் விளம்பரத்துக்கு அனுமதிக் கப்படவில்லை.

அச்சுப்பொறி மற்றும் வெளியீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி இல்லாமல் எந்த துண்டுப்பிரசுரம், சுவரொட்டி அச்சிடப்படவோ, வெளியிடவோ கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விளக்கப்பட்டன.

ஒரு குறிப்பிட்ட கட்சி வேட் பாளருக்கு பெறப்பட்ட வாகன அனுமதி மற்ற நபர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப் படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்