நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரில் - பணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை : நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரில் பண வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு சம்பா பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத் தில் 9 வட்டங்களில் 486 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் திறக்கப்பட்டு, அவற்றின் மூலம் இதுவரை 6.5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் வட்டங்களில் செயல்படும் 203 கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் பட்ட நெல் மூட்டைகள் சரிவர இயக்கம் செய்யப்படாததால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் அங்கேயே தேங்கியுள்ளன. இதனால், நெல் மணிகள் காய்ந்து, பல லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு கொள்முதல் நிலைய பணியாளர்கள் தள்ளப் படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதி சென்னை தலைமை அலுவலக விழிப்புக்குழு அதி காரிகள், திருவிடைமருதூர் வட்டத்துக்குட்பட்ட நேரடி நெல் கொள் முதல் நிலையங்களுக்கு, குறிப் பாக மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களுக்கு ஆய்வு என்ற பெயரில் சென்று, பண வசூலில் ஈடுபட்டதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதற்கு லாரிகளின் ஓட்டுநர்கள் ரூ.3 ஆயிரம் வரை மாமூல் கேட்பதாகவும் புகார்கள் வருகின் றன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யவும் நிர்வாக இயக்குநர், தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE