தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. கோடை காலத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
இந்நிலையில், மீண்டும் வெயி லின் தாக்கம் அதிகரித்ததால் அருவிகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. விடுமுறை தினமான நேற்று குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் திரண்டனர். ஆனால், அருவிகளில் பாறை யை ஒட்டியபடி குறைந்த அளவி லேயே தண்ணீர் விழுந்தது. பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago