செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே அதிகாரி களுக்கும், மக்களவை உறுப் பினர்களுக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப் பதாவது:
தென்காசி, செங்கோட்டை பகுதிகள் கேரள மாநிலத்தை யொட்டி அமைந்துள்ளன. இங்கிருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து இப்பகுதி களுக்கும் வணிகம், சுற்றுலா மற்றும் பணி நிமித்தம் ஏராள மானோர் சென்று வருகின்றனர். தற்போது சென்னை- கொல்லம் சிறப்பு ரயில் தினசரி ரயிலாக அதிகாலை 3.35 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி சிறப்பு ரயில் நள்ளிரவு 12.35 மணிக்கும் தென்காசியில் இருந்து புறப்படுகின்றன.
இந்த நேரம் தென்காசி மாவட்ட மக்களுக்கு உகந்ததாக இல்லை. எனவே, புனலூருடன் நிறுத்தப்படும் மதுரை- புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர்- புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago