காட்பாடி சன்பீம் பள்ளி மற்றும் லேணிங் பாயிண்ட் நீட், ஜேஇஇ அகாடமி வேலூரை தலைமையிடமாக கொண்டு சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் சார்பில் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்க ‘சயின்ஸ்பீம் ஒலிம்பியாட்’ என்ற மாநில அளவிலான போட்டி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்', ஜேஇஇ படிக்கும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ரூ.11 லட்சம் வரை ரொக்கத்தொகை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி தேர்வில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சயின்ஸ்பீம் தேர்வுகள் சென்னை, வேலூர் சன்பீம் பள்ளி மற்றும் மதுரையில் உள்ள லேணிங் பாயிண்ட் மையத்தில் நேற்று நடைபெற்றன. போட்டித் தேர்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்பட்டன.
தேர்வு எழுத வந்த மாணவர் களுக்கு சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் கரோனா பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நீட், ஜேஇஇ தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கி மாண வர்களை உற்சாகப்படுத்தினார்.
காலை 10 மணிக்கு தொடங்கிய போட்டித்தேர்வு நண்பகல் 1 மணியளவில் முடிவடைந்தது. இத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான பரிசளிப்பு விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும் என கல்வி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago