வேலூர் மாவட்டத்தில் 1,013 வாக்குச் சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்க உள்ளதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,783 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில், 193 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கெள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வேலூர் கொணவட்டம், சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எந்தவித பயமுமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 1,013 வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
இதில், பதற்றமான 193 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் 5 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர காவல் துறை சார்பில் அதிவிரைவு சிறப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் வாக்குப்பதிவின் போது மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் இருப்பார்கள். பிரச்சினை ஏற்படக் கூடிய இடங்களில் அதிவிரைவு சிறப்பு படை காவல் துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து செல்வார்கள்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago