‘பாஜக- அதிமுக கூட்டணியை தமிழகத்தில் தோற்கடிப்போம்’ :

By செய்திப்பிரிவு

விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் பாஜக- அதிமுக கூட்டணியை தமிழகத்தில் தோற்கடிப்போம் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் டெல்டா மாவட்ட அவசரக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லி போராட்டக் குழு உறுப்பினர் ராஜ்விந்தர் சிங் கோல்டன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் துரைராஜ், செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு மறுப்பதால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் டெபாசிட் பெறவதற்குகூட விவசாயிகள் வாய்ப்பளிக்கக்கூடாது.

மேட்டூர் அணையின் இடது கரையை உடைத்து மேற்கொள்ளப்படும் மேட்டூர் சரபங்கா திட்டத்தை தடுத்து நிறுத்த காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் முன்வர வேண்டும்.

மேகேதாட்டு அணை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி காவிரி டெல்டா விவசாயிகள் மார்ச் 27-ம் தேதி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, திருச்சி, கரூர், ஈரோடு, சத்தியமங்கலம் வழியாகக் சென்று, மறுநாள் மார்ச் 28-ம் தேதி மேகேதாட்டு பகுதியை முற்றுகையிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்