நெய்வேலி வில்லுடையான்பட்டுகோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறாது என்று கோயில் அறங்காவல் குழு தெரிவித்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நெய்வேலி நகரியத்தில் அமைந்துள்ள 5 பெரிய கோயில்களை என்எல்சி நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழு நிர்வகித்து வருகிறது. அந்த கோயில்களில் ஒன்றான வில்லுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா பிரம்மாண்டமான வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்படக் கூடிய சூழ்நிலையின் காரணமாக, தமிழக அரசு மற்றும் என்எல்சி நிர்வாகத்திடம் பெற்ற வழிகாட்டுதல் மற்றும் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்துப் பெற்ற கருத்துகளின் அடிப்படையிலும், பொது மக்களின் நலன் கருதி இவ்வாண்டு நடைபெறும் பங்குனி உத்திர உற்சவத் திருவிழாவின் வழக்கமான நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது. பொது தரிசனத்திற்கு மட்டும், குறிப்பிட்ட நேரங்களில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கைகளை சுத்தப்படுத்திய பின்னர் தனி மனித இடைவெளி விட்டு அனுமதிக்கப்படுவார்கள். பங்குனி உத்திர திருவிழாவிற்கு வர விரும்பும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வருகையைத் தவிர்த்து, சமூக நலன் கருதி கோயில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago