எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திண்டிவனம் ஆகிய கிளை அலுவலகங்கள், விக்கிரவாண்டி, மரக்காணம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், செஞ்சி ஆகிய துணை கிளை அலுவலகங்களில் எல்ஐசி ஊழியர்கள் 250-க்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாலிசிதாரர்களின் சேவைகள், பணம் பட்டுவாடா வசூல் பணிகள் பாதிக்கப்பட்டன. விழுப்புரத்தில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முதல்நிலை அதிகாரிகள் சங்க கிளை செயலாளர் கிருஷ்ணன்உன்னி, வளர்ச்சி அதிகாரிகள் சம்மேளன கோட்ட செயலாளர் சிவராமன், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளை தலைவர் குணசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago