சிவகங்கையில் இந்திய கம்யூ. வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர் : வேட்புமனு தாக்கல் செய்தார்

By செய்திப்பிரிவு

சிவகங்கை தொகுதியில் சீட் கிடைக்காததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரனுக்கு எதிராக அக்கட்சி யைச் சேர்ந்த விஸ்வநாதன் போட்டி வேட்பாளராக களமிறங்கினார்.

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குணசேகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அக்கட்சியின் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென் றார். பின்னர் அவர் சிவ கங்கை கோட்டாட்சியர் அலு வலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பலமுறை சிவகங்கையில் போட்டியிட வாய்ப்புக் கேட்டும் கிடைக்கவில்லை. அதனால் சுயேச்சையாகப் போட்டி யிடுகிறேன். எனக்குக் கட்சியில் பலரது ஆதரவு உள்ளது. இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறுவேன், என்று கூறினார்.

இந்நிலையில், விஸ்வநாதனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சித் தலைமை நேற்று அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்