அரசு விடுதியில் தரமற்ற உணவு விநியோகம் - சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் மறியல் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு பிற்பட்டோர் நல விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரி வித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கையில் உள்ள அரசு பிற்பட்டோர் நல கல்லூரி மாண வர்கள் விடுதியில், சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். குறிப்பாக மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாண வர்கள் அதிக அளவில் இங்கு தங்கியுள்ளனர்.

இந்த விடுதியில் தினமும் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று காலை புளித்துப்போன இட்லி வழங்கியதாகக் கூறி, அதைக் கண்டித்து மானாமதுரை சாலை யில் மாணவர்கள் மறியலில் ஈடு பட்டனர்.

அங்கு வந்த போலீஸார் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மாணவர்கள் மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி தரமான உணவு வழங்க வார்டனிடம் அறிவுறுத்திச் சென் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்