- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு :

By செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான வே.சாந்தா பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,454 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலரும், 3 வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு திருவாரூர் வேலுடையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குடி  தயானந்தா கலை அறிவியல் கல்லூரி, மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்துறைப்பூண்டி தூய அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில், வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முதற்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலர்களிடம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்